தென்றல் தந்த அமைதி !
அந்த நாள் தனிமை நிறைந்த அமைதியாக இருந்தது. அவள் எதையோ நினைத்தவாறு living hall ற்கு வந்தாள். Sofa வை பார்த்தவாறே கீழே அமர்ந்தாள்.
எதிரே இருந்த Tv யில் News Channel லில் ஏதோ ஒன்று ஓடிக்கொண்டிருந்தது...சத்தமே இல்லாமல்.
மனம் எங்கோ இருந்தது. என்ன ஏது, என்று நினைத்து கண் மூடி திறப்பதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது.
மூன்று மாதங்களுக்கு முன்பு தன் வாழ்க்கை எப்படி இருந்தது என நினைத்து முடிக்கும் முன்னரே அவள் கண்கள் குளமானது.
தலைக்கு மேலே விசிறி சுற்றியும் சுற்றாதவாரு சுற்றிக்கொண்டிருந்தது.
குளமான கண்கள் கரைபுறண்டு ஒரு துளி கண்ணீர் கண்ணம் வழிந்தது. ஒரு மிருதுவான தென்றல் காற்று மரு கண்ணம் தொடங்கி, காதோரம் நுழைந்து கூந்தல் காடு கலைத்து, சுற்றியே கண்ணீர் வழிந்த கண்ணம் தொட்டது, கண்ணீர் உறைய உதவியது.
வலப்பக்க தூரக்கோடியில் இருந்த French door ஐ பார்த்தாள். பூட்டியவாரு இருந்த கதவு புரியாததாய் பார்ப்பதாக தோன்றியது.
அம்மா சொல்லிச் சென்றது ஞாபகம் வந்தது.என்னனாலும் உடனே Call பண்ணு உடனே புறப்பட்டு வரேன்.mobile ஐ கையில் எடுத்து வெறித்து பார்த்தாள். பின்பு கீழே வைத்தாள்.
Lock Screen wallpaper ல் அவன் சிரித்துப் பார்த்தான் இவளை. அவனை பார்த்ததும் ஒரு குருநகை தோன்றியது. நெற்றியில் தென்றல் வருடியது. நீண்ட நாட்கள் ஆகிவிட்டது அவள் சிரித்து.
முன்னம் எப்பவோ பேசியது ஞாபகம் வந்தது அவளுக்கு மனம் அசை போட்டது.
ஏய் ஏன் இப்படி கீழ உட்கார்ந்துட்டு இருக்க, மேல Sofa ல உட்காருது தானே என்று வினவினாள்
இல்ல இதுதான் நல்லா இருக்கு, அமைதியா என்றான்.
ஹூம் என்றவாறே Sofa வில் வந்து அமர்ந்தாள்
என்னாச்சு சொல்லு என்று தொடர்ந்தாள்.
Nothing. ஒன்னும்மில்ல இந்த weekend மட்டும் ஏன் இவளோ வேகமா போவுதோ தெரியல என்றான்.
படம் பார்ப்பமோ என்றாள்
இல்ல வேணாம், நீ வேணா பாரு உள்ள போறேன் நானு என்று பக்கம் இருந்த remote ஐ நீட்டினான்.
முறைத்தாள்.
சரி வேணாம் விடு உர்னு ஆவாத, என்றான் மன்னிப்பு கேட்பவனாய்
அப்பறம் என்ன பண்ணலாம்னு கேட்ட இப்பிடி சொன்ன கோவம் வராதா...
ஹூம் என்றாள்.
சரி சொல்லு என்ன பண்ணாலாம் என்றாள் தொடர்ந்து
ஒன்னும் பண்ண வேணாம் சும்மா இருப்போமா என்றான்.
சும்மாவா ஹூம் ok என்றாள்.
இப்போ இந்த இடம் எவ்ளோ எனக்கு பிடிச்சிருக்கு தெரியுமா, அமைதியா என்றான்
இப்பிடியே இருக்கலாமா? என்று சற்று சலனம் உற்றவனாய்
இது நம்ம வீடு இப்பிடியா இருக்கலாம் என்றாள் விவரம் ஏதும் அறியாமல்
யார் தடுக்க இருக்கா? எவ்ளோ நேரம் வேணா சும்மா யிரு.
சரி ஏதாவது சாப்பிடுறியா என்று கேட்டு முடிக்கும் முன்பே அவன் mobile ஓவென ஒலித்தது, அந்த மொத்த அமைதியும் குலைத்தவாறு.
"Mahesh Manager" என்று திரையில் தெரிய வெறுப்போடு கைப்பேசியை எடுத்துக்கொண்டு Sofa வின் எதிரே TV Set க்கும் பின்பு இருந்த room க்கு சென்றான்.
கதவை சாத்தும் முன்னே office என்று ஊமை மொழியில் சொல்லியபடியே கதவை சாத்தினான்.
செய்வதறியாது அவனை பார்க்க கதவு முடியது.
கனவு முடிய நினைவு மீண்டது.
இன்று அவள் அவனிருந்த அதே இடத்தில் இருந்து அந்த room ஐ பார்த்தாள்.
கதவு திறந்து தான் இருந்தது ஆனால் உள்ளே அவன் இல்லை, வெறுமை நிறைந்து இருந்தது.
எங்கடா இருக்க என்ற வாரு பெருமூச்சு இரைத்தாள். கழுத்தை சுற்றியே ஒரு தென்றல் மெல்ல முகம் பரவியது இதமாக
ஏக்கம் தொண்டையை கவ்வியது. என்ன இப்படி தனியே விட்டுப் போயிட்டியே டா? என்று கோபம் தோன்றும் முன்பே அதை மறக்கடிக்கும் வன்னம் மீண்டும் வருடியது காற்று காதோரம்.
ஏக்கம் ஒரு நொடி காணாமல் போனது. ஏதோ தோன்றியவளாய் நீயா? என்றாள்.
கழுத்தை சுற்றிய வாரு தென்றல் தீண்டியது. புன்னகை தோன்றியது. கையை கொண்டு வாயை பொற்றிக் கொண்டு அழுதாள்.
நீயா? என்று மீண்டும் சற்று உரக்கவே கேட்டாள்.
மீண்டும் தென்றல் தீண்டவே கூந்தலை கோதிக் கொண்டே நிமிர்ந்து அமர்ந்தாள்.
நிஜமா நீயா? என்றாள் கண்கள் கண்ணீர் வழிய
அரை நொடி நிசப்தம் உறிதியை உடைக்க, அவள் எழ எத்தனித்தாள். ஒரு காற்று மேலே மோதியது. அவளை அமர்த்த இழுப்பது போன்ற உணர்வளித்தது, நானிப்போனால் அவள்.
துள்ளி எழுந்து சிரிப்போடு ஓடினாள் வீட்டினில் உள்ளே
TV யில் New Channel லில் கீழே கண்கள் எப்போதும் கவனிக்காத அந்த ஓடும் செய்திகளில் புயல் கரைக்கடக்கயிருப்பதால் இன்று காற்று சற்று வேகமாக இருக்கக் கூடும். நாளை பரவலான மழையை தமிழகம் எதிர்பார்கலாம் என்று ஓடியது.
COMMENTS