மழைக்காலம்!!
மரங்கள் தினம் குளிக்கும்
மழைக்காலம்...
நீருண்ட மண் சேரும் துளிகள் சேறாகும்.
மலர் இதழ் சேரும் துளியோ தேனாகும்.
அடர்ந்த மரங்களிடை செல்லுங்கள்
கிளைகள் நெளித்தாலும்...
இலைகள் சிலிர்த்தாலும்...
மழை நின்ற பின்னும் -
மழை நீரில் குளித்திடலாம்.
மழைச்சாரல்
வானம் வெட்டும் மின்னல்!
தாளம் தட்டும் ஜன்னல்!
இடிகள் இசைக்க...
துளிகள் தெறிக்க...
மழை தொடங்குது கிளியே!
மழையில் நனைந்து-
குளிரில் நடுங்கும்...
குயில் -
குரல் இட வில்லையே!
சாரல் தொடருது கிளியே!
மழை எனும் சிங்காரி
பெத்த வீட்டுக்கு
முத்து மணி...
புகுந்த வீட்டுக்கு
நெல்லு மணி...
மேகம் கூடி- பெத்த புள்ள!
மின்னல் கொடி
அத்த புள்ள!
மழை எனும் சிங்காரி
மழை
என் - முற்றத் தரையில்...
முத்தச் சத்தம்.
முந்தி வரும் -முதல் துளிகள்...
வாசற் கோலம் கொத்தும்.
உடன் பிறந்த துளிகள்
திரண்டு
நடை பயின்றோடும்.
COMMENTS