வாராத செல்வம் நாடி வாடாத நாளில்லை !!!
வற்றாத வண்ணம் அதுவும் வேண்டாம்.
பண்ணாத பாவம் ஒன்றின்கு இல்லை !!!
பழி பாவம் ஒன்றும் நீ போக்க வேண்டாம்.
எழில் கோலம் இழந்தேனும் நோயாலே நொந்தாலும் !!!
இக்காயம் அல்லல் நீ நீக்க வேண்டாம்.
எனை ஆளும் முருகனை -
பெற்றெடுத்த ஈசனே...
அண்டத்தை ஆளுகின்ற -
தில்லை நடராஜனே...
என் மனம் நோவுதையா !!!
என் குறை தீருமையா !!!
இப்பிறப்பில் இப்பாவி -
எப்பாவம் செய்தாலும்...
ஓயாது உன்னை ஒன்றென்றும் வேண்டுவேன் !!!
உண்டென்று தருவாயா நீ ?
திரு நீறு உடல் பூசி...
திருத்தாண்டவம் ஆடும்...
கைலாய மலைவாசி !!!
உன் பாதம் பெற வேண்டும்...
அதுகாரும் வேறில்லை !!!
நான் வேண்டும் நல்லாசி !!!
COMMENTS