கோவலன் வருவான்
வளைகரம் பிடிப்பாநென
கோதையும் காத்திருந்தேன்...
கோடையில் வாடும் மாரிக்கு ஏங்கும் பயிரென வாடி நின்றேன்...
காக்கவைக்கும் தருணமும் இதோவோ
மனதுக்குள் கடிந்து கொண்டேன்...
நேரங்கள் கடந்திட
குழப்பங்கள் எழுந்திட
கலக்கம் கொண்டேன்...
மாயவன் வரவில்லை
தவிப்புக்கு தீர்வில்லை
இருமனம் சேரும் திருமணம் இன்றில்லை
கழுத்தில் ஏறா
கைகளில் எந்திய மாலையின் பூக்கள்
வீதியில் விலுந்ததடா...
கண்மையை அழித்த
கண்ணீர் ஊற்றோ
கன்னத்தை தொட்டதடா...
நீ வரா விசித்திரம் எண்ணி
மனம் பைத்திய மாகுதடா...
சிலையன வந்தவள்
கலை இழந்தால்
காதல் தந்த கோலமடா...
COMMENTS