இரவு, நிலவு, கடல்!
இரவும், நிலவும், நீயும்
இணைந்து விட்டால்...
நீ - நிலவின்
பின்பம் சிறை பிடிப்பாய்...
சிற்றலையில்
ஒளியை சிதறடிப்பாய்...
ஒலமிடும் காற்றுடன்
அலை அடிப்பாய்...
மேனி உறைந்தாலும்
பனி பாறை வளர்ந்தாலும்
பாரமுன் தலையில்
சுமப்பாய்...
குளிர்
இரவிலும்
குளிரா குடில்
கொண்டு
கோடி உயிர்
காக்கும் கடலே...
உன் புகழை
எவ்விரவும்
விண்மீன்களும்
மெச்சும்.
COMMENTS