உயிரும் உதிரமும் - அவள்
துடைத்து எடுத்தாலும்
நெஞ்சில் ஊறி விடுகிறாள் - அவள்
உதிரம் போன்றவள்
உயிருக்கு நெருக்கமானவள்.
நெஞ்சின் பள்ளத்தில்
பாய்ந்த முதல் வெள்ளம் - அவள்
அங்கு கொட்டி நிரைந்து
குருதியில் கலந்தவள்.
நரம்புகளில் நாடிகளில்
புரண்டு ஓடி
நினைவெல்லாம் கொட்டிப் பொழிந்து
நான் மூழ்கும் பொழுதில்
வற்றி வறண்டு
நெஞ்சை சுழையில் சுட்டு
தசைகளை துளைத்து
தொலைந்து போன - அவள்.
COMMENTS