செம சுடு…கொஞ்சம் குளிரு … Hot & Hotter

புதுகோட்டை தொகுதிக்கு… டும்..டும்…டும்….

இதனால் அவனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. வருகிற ஜூன் மாதம் 12 ஆம் தேதி இடைதேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று.. தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. மே 18 ஆம் தேதி வேட்புமனு தாக்குதல் தொடங்கி, விலகிகொள்வதற்காக மே 28 என்று அறுவிக்கப்பட்டுள்ளது.

அது என்னமோ தெரியல.. என்ன மாயமோ தெரியல.. அம்மா தனது கட்சி வேட்பாளரை அறுவித்த அடுத்த நாளே.. தேர்தல் கமிஷன்க்கு மணி அடிச்சிருச்சி போல.. இந்த முறையும் வேட்பாளரை அறிவித்ததில், அம்மா தான் முதல்.. மத்த கட்சி எல்லாம்.. இப்போ மண்டைய பிச்சிகிட்டு இருக்கு.

மல போல நம்பியிருந்த சங்கரன் கோவில் தேர்தலில் மக்கள் கொடுத்த அல்வாவையே.. இன்னும் தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க கட்சிகள் ஜீரணிக்க முடியாமல் தவித்து கொண்டு இருகின்றன. அடுத்ததா?

இந்த தேர்தலும் நான்கு அல்லது ஐந்து முனை போட்டிதான் நடைபெறும் என்று ஒரு பேச்சு. சரி யார் யார் அந்த வேட்பாளர்கள் என்று கொஞ்சம் பார்போம்.

ஆ.இ.அ.தி.மு.க சார்பில் திரு.வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவர் என்று அம்மா ஏற்கனவே அறுவித்து விட்டார். இவர் புதுகோட்டை முனிசிபாலிட்டி சேர்மன் மற்றும் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி தலைவர் ஆவர். மேலும் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்.

புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த போது இவரது குடும்பம்தான் மன்னர் அந்தஸ்தில் ஆட்சி செய்து வந்தது. விஜயரெகுநாதன் காங்கிரசில் எம்.எல்.ஏ.,வாக 3 முறை ( 1967 , 1977, 1980 ) களில் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். கார்த்திக் தொண்டைமான் தான் இந்த சமஸ்தானத்தின் ஒரே வாரிசு. மக்கள் மத்தியில் ஏற்கனவே செல்வாக்கு கொண்டிருப்பதால் இவரது வெற்றிக்கு பெரும் சிரமம் இருக்காது என இப்பகுதி அ.தி.மு.க.,வினர் கருத்து தெரிவித்துள்ளனர்.


எது நடக்கக் கூடாதோ என்று நினைத்தார்களோ கடைசியில் அது நடந்தே விட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவகாரத்தில். புதுக்கோட்டைக்கு வேட்பாளரை அறிவிக்காமல் தங்களுக்கு எப்படியாவது அதிமுக ஆதரவு தரும் என்ற பெருத்த நம்பிக்கையில் இருந்த அக்கட்சியினர் தலையில் மண்ணைப் போட்டு விட்டு கார்த்திக் தொண்டைமானை வேட்பாளராக அறிவித்து விட்டது அதிமுக.

இதனால் அவர்கள் தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வருவார்களா அல்லது தேமுதிக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று அதிமுகவுடன் பலப்பரீட்சை நடத்த முயல்வார்களா என்பது தெரியவில்லை.

ஆனால் தா.பாண்டியனுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையிலான நட்பை வைத்துப் பார்க்கும்போது பேசாமல் அவர் ஒதுங்கும் முடிவுக்கும் போகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிடுவது டைம் வேஸ்ட் என்று சொன்னவர்தான் தா.பாண்டியன் என்பது நினைவிருக்கலாம்.

தி.மு.க. சார்பில்- பெரியண்ணன் அரசு நிறுத்தப்படுவார் என்று தெரிகிறது எனினும் என்னும் தலைமையில் இருந்து முடிவு வெளியாகவில்லை. பொறுத்து இருந்து தான் பார்க்கணும். இவர் 2011 ஆம் நடந்த தேர்தலில் சி.பி.ஐ. வேட்பாளர் ஆனா திரு.முத்துகுமரன்(மறந்த) இடம் சொற்ப வோட்டுகள் (மொத வாக்கில் இரண்டு சதவிதம்) மூலம் தோல்வியை தழுவியவர்.

சங்கரன் கோவில் தேர்தலில், தங்களை ஆதரிக்காததால் தே.மு.தி.க கட்சி, அம்மாவின் அறிவிப்பால் முழி பிதுங்கிபோய் உள்ள சி.பி.ஐ கட்சியை அதரவு அளிக்காமல், தனித்து தன் கட்சி வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர் பார்க்கபடுகிறது. அப்படி ஒன்று நடந்தால் அது தி.மு.க. கட்சிக்கு சாதகமாக அமையும்… தே.மு.தி.க எப்படி காய் நகர்த்த போகிறது என்று பொறுத்து இருந்து பார்போம்.

இன்று இருக்கும் அரசியல் சுழலில், புதுகோட்டை தொகுதியில் தி.மு.க விற்கே அதிக வாய்புகள் உள்ளது. ஆனால் ஆளும் கட்சி அதிமுக ஜெயய்பதற்காக என்ன வேணாலும் செய்யலாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஜூன் 15 வரை பொறுத்து இருந்து பார்போம்.

Super appu…

Billa 2 – Gangster Teaser Song

பில்லா 2 படத்தின் Gangster பாடலின் டீசர் இன்று சோனி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.. இதோ உங்களுக்காக..